நட்சத்திரம் - வரலாற்றில் மறைக்கப்பட்ட பேரரசன்

முன்குறிப்பு:

சில ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கோப்பெருஞ்சிங்கன் என்கிற அரசனை பற்றிய ஒரு ஆராய்ச்சி நூலை படித்தேன், கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களுடன் எழுதப்பட்ட அந்த நூலின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர் எதுவும் நினைவில்லை ச்ச்எனினும் சில நாட்களுக்கு முன் அதை நூலகத்தில் தேடியபோது கிடைக்கவில்லை, எனவே அந்த நூலில் கூறப்பட்டிருந்தவற்றை என் நினைவிலிருந்தும் மற்றவற்றை வரலாற்று நூல் ஆதாரங்களுடனும் எழுதுகின்றேன்.

கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278)

தற்போதைய ஆரணியின் அருகிலுள்ள படவேடு என்கிற ஊர் அந்த நாட்களில் படைவீடு என்று அழைக்கப்பட்டது அங்கே நிலை கொண்டிருந்தது கோப்பெருஞ்சிங்கனின் படை.

கருத்த மேனியுடன் ஆஜானுபகவான தோற்றத்துடன் இருந்த அரசன் கோப்பெருஞ்சிங்கன் தன் படை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு சென்று அணிவகுத்து நிற்கும் தன் படையை பார்வையிடுகின்றான்.தீர்க்கமான அவன் கண்கள் செக்கச்செவேல் என சிவந்திருந்தது, உள்ளம் எங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டெறிந்து கொண்டிருந்தது.

வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கங்களுக்கிடையில் படையினை பார்வையிடுகின்றான், படையின் ஒவ்வொரு வீரனும் சுதந்திர தாகத்துடன் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதையும் எதிர்கொள்ள தயாராக கட்டுக்கோப்பாக நின்ற படையை பார்த்த நிமிடத்தில் சுதந்திரத்திற்காக தாங்கள் மோதப்போகும் சோழப்படையின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தாலும் நிச்சயம் சுதந்திர தாகம் தீரும் என்ற நம்பிக்கையில் தன் கூடாரத்திற்கு சென்றான்.

அன்றிரவு முழுதும் தூங்காமல் ஏதேதோ சிந்தனைகள், தன் தளபதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள், ச்ச்தம் மூத்தோர்கள் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் கட்டிக் காத்த பல்லவ பேரரசு சோழர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டால் சிதைக்கப்பட்டு சிதறிய கதைகள் கேட்டு வளர்ந்த போதே சோழப்பேரரசை வென்று அதன் அடிமையாக இருக்கும் இந்த அரசை மீட்டு மீண்டும் பல்லவ பேரரசை நிறுவ வேண்டுமென உறுதி பூண்டான், சத்திரியனாக மட்டும் இருந்தால் போதாது, இதற்கு சாணக்கியத் தனமும் வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தான். தான் எழுதப்போகும் சோழப்பேரரசின் முடிவுரையை நாளைய வரலாறு பேசும், பல்லவ குலத்தின் மாவீரனொருவன் சோழப்பேரரசை முடித்து மீண்டும் பல்லவ பேரரசை நிலைநிறுத்தியதை வரலாறு பாராட்டும் என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான், சோழப்பேரரசுக்கும் சேந்தமங்கலப் போரில் முடிவுரை எழுதினான், ஆனால் அன்று கோப்பெருஞ்சிங்கன் எண்ணியிருக்க மாட்டான் சோழ மாயை இருபதாம் நூற்றாண்டிலும் கூட வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மறைத்திருக்குமென்று.

கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை தென்னாற்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான்(ர்)(வரலாற்று நூல்களில் அவன்,இவன் என்று பேசினாலும் நாம் இனி அவர் என்றே அழைப்போம்) சில வரலாற்று ஆசிரியர்கள் ஆரணி அருகிலிருக்கும் படைவீடு(படவேடு) தான் இவரின் தலை நகரம் என்கிறார்கள். வெகு சில ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட பல அரசர்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்கு கூட கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலம் அரசாண்ட இவரின் பெயர் வெளியில் தெரியவில்லை.

ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன், வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது.

இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன்.

பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார். இதை சில வரலாற்று ஆசிரியர்கள் சோழமன்னன் தப்பியோடியபோது அவரை கைது செய்து சிறையிலடைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

வட நாட்டு அரசர்களையும், இசுலாமிய அரசர்களையும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்கும் போது பொதுவாகவே தமிழக அரசர்கள் மிகுந்த கருணையுடன் இருந்துள்ளனர்.பொதுவாகவே பெரிய அளவில் வாரிசுரிமைப்போர் தமிழகத்தில் நடந்தது என்றால் அது வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் கி.பி.1310ல் நடந்த ஒன்றே ஒன்றுதான், மேலும் போரில் தோல்வியுற்ற அரசர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர், ஆனால் வட நாட்டு வரலாறிலும், இசுலாமிய அரசர்களும், இலங்கை மகாவம்ச வரலாறும் சீன வரலாறும் சொல்வது அரசுகட்டிலுக்காக சொந்த மகனையும், தாயையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றழித்தனர், அது மட்டுமின்றி தலைவேறு உடல்வேறாக கிடப்பவன் மட்டுமே பிரச்சினை தராத எதிரி என்று நம்பியதால் தோல்வியுற்ற மன்னர்களை உடனடியாக கொன்றழித்தனர், மேலும் எதிரிகளின் குழந்தைகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்தாலும் கூட கொல்வர் அல்லது கண்களை தோண்டி எடுப்பர்.

அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தது மட்டுமின்றி அவர்களின் மகளிரையும் சிறைபிடித்து சென்றார். சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்

தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார், அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், பல கோவில்களை கட்டியும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு அவற்றில் சில பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன். பல கோவில்களை கட்டிய இவர் சில கோவில்களை இடித்தும் உள்ளார், சோழ நாட்டை போர் தொடுத்து வென்றபோது சோழ நாட்டில் சில கோவில்களை இடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொண்டைமண்டலம் முழுவதும், சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.


கி.பி.1255ல் மீண்டும் விதி கோப்பெருஞ்சிங்கனை பார்த்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வடிவில் சிரித்தது, சேந்தமங்கலம் பாண்டியர்களால் முற்றுகையிடப்பட்டு மீண்டும் வேற்றரசுக்கு அடிமையானார் கோப்பெருஞ்சிங்கன், பாண்டிய மன்னர்களின் வடக்கத்திய போர்முனைக்கு தன் படைகளை நல்கி பாண்டிய அரசுடன் ஒரு சமாதான போக்கையே இறுதி வரை கடைபிடித்தார்.

சரி இனி சில வரலாற்று ஆசிரியர்கள் இவர் மீது எழுப்பும் குற்றசாட்டை பார்ப்போம்.

முதல் குற்றசாட்டு சோழனுக்கு அடங்கிய சிற்றரசன் எப்படி சோழப்பேரரசனையே சிறையிலடைப்பான் இது துரோகமல்லவா?

எது துரோகம்? தன்னை நம்பிய தன் மாமனார் எண்பத்திமூன்று வயது ஜாலாலுதின் கில்ஜி தம்மை வரவேற்க தனியாக வந்தவரை வெட்டிக்கொன்றாரே அலாவுதின் கில்ஜி அது வரலாற்றுத்துரோகம், தன்னை தத்தெடுத்து வளர்த்த தாய் மீனாட்சியை எதிர்த்து கலகம் செய்தானே விஜயகுமாரன் அது துரோகம் (சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜபேரிகை நாவலில் இந்த விஜயகுமாரன் தான் கதாநாயகன்)

பல்லவ வழித்தோன்றல் தன் மூத்தோர்களின் பேரரசை நிறுவ முயன்றதா துரோகம்? சோழர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் நாட்டை விடுவிக்க போர்புரிந்தது துரோகமென்றால் இந்த துரோக குற்றச்சாட்டு பாய வேண்டியது முதலில் சோழர்களின் மீது தான். பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள் பாண்டிய பல்லவப் போரில் நடத்திய அரசியல் சதுரங்கத்தில் முதலில் பாண்டியர்களை பல்லவர்களுக்கு துணையாக நின்று வீழ்த்தி பிறகு பல்லவர்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள் எனக் கூறி போர்தொடுத்து வீழ்த்தினார்களே!! (பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்)

அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கனை பற்றியும் அவரது அரைநூற்றாண்டு அரசைப்பற்றியும் சில வரிகள் மட்டுமே பல வரலாற்று புத்தகங்களில் காணக்கிடைக்கின்றது, அதில் பாதிக்கும் மேல் அவரின் மீதான எள்ளல்களாகவே இருக்கின்றன.

டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்

"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான் பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் என்பன அவற்றுள் சிலவாம்"
(வென்றது உண்மை தானே, வெல்லாமலா தஞ்சையிலிருந்து கோதாவரி வரை இவரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன? தெள்ளாறு, சேந்தமங்கலம், பெரம்பலூர் போர்களின் முடிவு கோப்பெருஞ்சிங்கனுக்கு தானே சாதகமாக இருந்தது.)

"பல்லவர்கள் அல்லது காடுவெட்டி பரம்பரையில் தான் தோன்றியதாக பெருமை பிதற்றினான்"
(பிதற்றினானா? பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன? இதைப்பற்றிய ஒரு பெரிய அத்தியாயமே முனைவர் பட்டத்திற்கான அந்த ஆராய்ச்சி நூலில் இருந்தது, மேலும் இவரின் கல்வெட்டுகள் பல்லவர் கல்வெட்டுகள் என்ற பிரிவின் கீழ்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளது)

இது மட்டுமின்றி பல வரலாற்று நூல்களில் கோப்பெருஞ்சிங்கன் அவருக்கு அவரே பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டதாகவும் எள்ளல் தொனிக்கும் படி எழுதியுள்ளனர், இவருக்கு பட்டபெயர் விடயத்தில் எள்ளலாக எழுதினால் இராசராசன் முதல் பல அரசர்கள் பட்டப்பெயர்கள் வைத்திருந்ததை எப்படி எழுதுவது?

அரைநூற்றாண்டுகள் தமிழக அரசியலின் மையமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் பற்றிய பதிவுகளும் இடமும் வரலாற்று நூல்களில் மிகச்சிலவே. ஏன் இப்படி? சில வரலாற்று ஆசிரியர்களுக்கும் சோழ மாயையா?

மேற்கோள் நூல்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை
தாய்நிலவரலாறு - பேராசிரியர் கோ.தங்கவேலு
தமிழகவரலாறு - சென்னை பல்கலைகழக இளங்கலை வரலாற்று பாடநூல்
whatisindia.com

49 பின்னூட்டங்கள்:

said...

Vested Interest ?

Vijayendran

said...

"(பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்)"

கி. ராஜேந்திரன் அவர்கள் எழுதிய "ரவிகுல திலகன்" என்ற நாவல் நீங்கள் குறிப்பிடும் காலக் கட்டத்தைப் பற்றி எழுதுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்னொரு நாவலும் எழுதப்பட்டது. அதில் பல்லவர்கள் எவ்வாறு ஒப்பந்தத்தை மீறினார்கள் என்று கூறப்பட்டது. இரு நாவல்களும் கல்கி பத்திரிகையில் தொடர் கதைகளாக எண்பதுகளில் வந்தன.
நாவல்கள்தான் என்றாலும் ஆசிரியருக்கு எழுதிக் கேட்டால் அவர் ஆதாரங்களைக் கொடுப்பார் என நினைக்கிறேன்.

இன்னொரு துணுக்கு. ரவி குல திலகன் நாவலின் கதாநாயகியின் பெயர் குழலி!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன்//

பல்லவர்கள் "பஹ்லவர்கள்" எனப்படும் பாரசீக ஆட்சியாளர்களின் ஒரு பிரிவினரே ஆவர். இவர்கள் தென்னிந்தியாவை அடைவதற்கு முன்னால் வடநாட்டில் பலகாலம் ஆண்டதால் வடமொழியை அலுவல்மொழியாகக் கொண்டவர்கள்.

-(Ref: P.T.Srinivasa Iyengar - History of the Tamils )

வன்னியர்கள் பல்லவர்களானால் அவர்கள் தமிழர்களே இல்லை.

நாராயண நாராயண நாராயண !!!

said...

"(பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்)"

http://www.maraththadi.com/article.asp?id=2752

I think this one will help you kuzhali.

தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப்போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்புகொள்ள வேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுகளும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண மன்னன் காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ இவர்கள் தம் முழு ஆதரவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழமன்னனை இச்செயலில் இறக்கியது, "புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்" என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுகூடக் காணவில்லை.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர். இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்க வர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன் கங்க மன்னன் முதலாம் பிரதி வீபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி, பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவியதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்கினான். முதலாம் பிரதிவீபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.

இதிலிருந்து முதலாம் ஆதித்தன் கி.பி. 870-லிருந்து கி.பி. 907 வரை, ஏறத்தாழ 36 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என அறிய இயலுகிறது. கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது என்றும் இதிலிருந்து அறியலாம்.

said...

சரித்திர ஆராய்ச்சி இவ்ளோ பண்ணியிருந்ததிலிருந்து, சாண்டில்யன் எல்லாமுமே வாசித்திருப்பீர்கள் என்ரு நினைக்கிறேன். வரலாற்று மாணவரா?

said...

நல்ல பதிவு குழலி, நட்சத்திரமானதற்கு (தாமதமான) வாழ்த்துகள்.

ஆக, வரலாற்றிலேயே பல்லவர்கள் நல்லவர்கள் அல்ல என்று திரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறீர்கள்.. ஏற்கனவேயும் இப்படி ஒரு பதிவு போட்டிருந்தீர்கள் அல்லவா? எனக்கு கல்கி நாவல்கள் தவிர்த்து வரலாற்று அறிவு கிடையாது எனினும் உங்கள் வாதம் சிந்திக்க வைக்கிறது.

என் செல்லச்சித்தாந்தங்களில் ஒன்று வரலாற்றில் ஜெயித்தவன் நல்லவன், தோற்றவன் கெட்டவன் - அவ்வளவுதான். அது தவிரவும், மூவேந்தரைத் தவிர வேறு யாரையும் தமிழராக ஒத்துக்கொள்ளாத அரசியலும் வரலாற்றைப்பாதித்திருக்கக்கூடும்.

said...

கைதேர்ந்த எழுத்தாளரின் நடைக்கு வந்து விட்டீர்கள். அருமை குழலி.

said...

//பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன?//

குழலி பல்லவகுலம் அப்படி ஒரே நாளில் அழிந்துபோய்விட்டிருக்க வாய்ப்பில்லைதான். முதலாம் ஆதித்தனின் 23-ம் ஆட்சி கல்வெட்டில் கூட சோழ அரசியின் தாய் ஒரு காடுவெட்டிகள் என்று கூறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இவன் ஒரு பல்லவ இளவரசியை மணந்திருந்தான். இதன் மூலமாகக்கூட ஒரு கிளைவழி இருந்திருக்கலாம்.

கோச்சிங்கனைப்பற்றி தேடிப்பார்க்கிறேன்.

said...

Krupavaik keettiinggaLaa?

said...

கோப்பெருஞ்சிங்கன்


ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை திருவேந்திபுரம் கல்வெட்டு விவரமாகச் சொல்வதுடன் இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு அவனை விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று திருவெந்திபுரம் கல்வெட்டு தெரிவிக்கிறது. (சமஸ்கிருதத்தில் இவன் பெயர் மஹராஸ சிம்ம எனப்படும்.) இந்த காலப்பகுதியின் வரலாற்றில் இவனுக்கு நிறைந்த இடம் உண்டு. தமிழ்நாட்டிலும் கன்னநாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன.

இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.

தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.

said...

பொதுவாகவே வரலாற்று நாவல்களின் துணை கொண்டு வரலாற்றை அளவிட முடியாது. வரலாற்றுப் புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. அவர்களின் ஆதாரங்களிலிருந்து பார்த்தால் உண்மை விளங்கலாம். நானும் தேடிப்பார்க்கின்றேன்.

said...

பின்னூட்டங்களுக்கு நன்றி,

டோண்டு அய்யா வண்டார் குழலி என்ற பெயரிலிருந்து சுட்டது தான் குழலி,

சுட்டிகளுக்கு நன்றி மோகண்தாஸ்

தாணு, நான் வரலாற்று மாணவன் அல்ல, படித்தது இயந்திரவியல் பொறியியல் பட்ட படிப்பு, வேலைபார்ப்பது தகவல்தொழில் நுட்பம், ஆனால் வரலாற்றில் ஆர்வம் உண்டு,
சாண்டில்யனின் சில கதைகள் படித்துள்ளேன், முதன்முதலில் நான் படித்த வரலாற்று புனைவு கதை சாண்டில்யனின் ராஜபேரிகை அதன் கதாநாயகன் விஜயகுமாரன், ஏதோ ஒரு கணத்தில் இந்த விஜயகுமாரனை பற்றிய வரலாற்று புத்தகத்தில் படித்த போது தான் விஜயகுமாரனுக்கு வரலாற்றில் தரப்பட்ட துரோகி பட்டம் புரிந்தது, அதே போல் சோழ வரலாற்றையே பொன்னியன் செல்வன் வழியாக பார்த்தது எத்தனை தவறு என்று பிறகு அறிந்து கொண்டேன்.
சாண்டில்யன், கல்கி எழுதியதெல்லாம் வரலாறு அல்ல சில உண்மை சம்பவங்களோடு கூடிய வெறும் புனைக்கதைகளை அதை வரலாறாக பார்ப்பது சரியல்ல என்பது என் கருத்து.

//என் செல்லச்சித்தாந்தங்களில் ஒன்று வரலாற்றில் ஜெயித்தவன் நல்லவன், தோற்றவன் கெட்டவன் - அவ்வளவுதான்.//
ம்... உண்மை போல தெரியவில்லை எனக்கு, ஏனெனில் தைமூர்,செங்கிஸ்கான் எல்லாம் வென்றவர்கள் தானே ஆனால் வரலாறு அவர்களுக்கு நல்லவர்கள் பட்டம் தரவில்லையே.

// அது தவிரவும், மூவேந்தரைத் தவிர வேறு யாரையும் தமிழராக ஒத்துக்கொள்ளாத அரசியலும் வரலாற்றைப்பாதித்திருக்கக்கூடும்.
//
ம்.. உண்மைதான்

த்ரிலோக சஞ்சாரி, பதிவில் எழுதியிருப்பது வரலாற்று நூல்களிலிருந்து எடுத்து எழுதியது, இதிலும் கூடவா பதிவை திரிக்க வேண்டும் எல்லாம் என் தலையெழுத்து,

பல்லவர்கள் தமிழர்களா? இல்லையா என்பது பற்றிய நீண்ட நெடுங்கால ஆராய்ச்சிகளும் முடிவுகளும் உள்ளன, அதில் பல்லவர்கள் தமிழர்கள் என்ற முடிவுக்கு சாதகமாகவே பல வரலாற்று ஆசிரியர்கள் உள்ளனர், பிறிதொரு பதிவில் இது பற்றிய வரலாற்று ஆசிரியர்களின் கருத்துகளை பார்ப்போம்.

நன்றி மூர்த்தி ஆனாலும் கொஞ்சம் அதிகம் தான் உங்களுக்கு

said...

ஒரு ஆராய்ச்சியே செய்திருப்பீர்கள் போலிருக்கிறது.மாறுபட்ட வரலாற்று தகவல்களுக்கு நன்றி!எழுத்து நடை மிகவும் நன்றாயிருக்கிறது.

said...

மிகவும் அருமையான பதிவு.

பாராட்டுகள் குழலி அவர்களே!

வரலாற்று பதிவுகள் படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

முதல் முறையாக மன்னர் கோப்பெருஞ்சிங்கன் அவர்களைப் பற்றி படிக்கிறேன்.

அது நம்ம மன்னர்கள் ஒருத்தருகுக் ஒருத்தர் அடித்து, செத்திருக்கிறார்கள். அப்போ எவ்வளவு பேர் பாதிக்கபட்டிருப்பார்கள்.

எனது இலங்கை நண்பர் ஒருவர் சொன்னது என்றும் மறக்காத வாக்கியம்

"பாண்டிய, சோழ, சேர மன்னர்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்திருந்தால், இன்று தமிழ் உலகப் பொது மொழியாகி இருக்கும், தமிழினம் உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கும்"

எத்தனை சத்தியமான வார்த்தைகள்.

said...

நன்றி ஜோ மற்றும் பரஞ்சோதி

//வரலாற்று பதிவுகள் படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
//
ம்... அப்படியென்றால் இன்னும் ஒரு வரலாற்று பதிவு நட்சத்திர வாரத்தில் பாக்கியிருக்கின்றது, அவர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்களே... வெள்ளி அல்லது சனிக்கிழமை இடுகின்றேன்

நன்றி

said...

தகவல்களுக்கு மிக்க நன்றி மோகன்தாஸ் வரலாற்றில் நிறைய ஆர்வம் உள்ளவரா? நிறைய தகவல்கள் வைத்துள்ளீர்.

said...

என்னாச்சி குழலி. திடீர்னு Historianஆ மாறிட்டீங்க? சர்ச்சைக்குள்ளாகாம பதிவுகள போடணும்னா இப்பல்லாம் முற்கால சரித்திரத்தை எழுதறதுதான் சரின்னு தீர்மானிச்சிட்டீங்க போலருக்கு.

வாசிக்கறதுக்கு நல்லா சுவையாத்தான் இருக்கு. வாழ்த்துக்கள்.

said...

//என்னாச்சி குழலி. திடீர்னு Historianஆ மாறிட்டீங்க? சர்ச்சைக்குள்ளாகாம பதிவுகள போடணும்னா இப்பல்லாம் முற்கால சரித்திரத்தை எழுதறதுதான் சரின்னு தீர்மானிச்சிட்டீங்க போலருக்கு.
//
ஹி ஹி அதிலேயே எவ்வளவோ சர்ச்சைகள் இருக்கு, வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ந்து விவாதித்து எழுதும் போதே இத்தனை சர்ச்சைகள் இருக்கின்றது, இதிலே கண்ணை மூடிக்கொண்டு ஊடகங்கள் ஆளுக்கொரு கதை சொல்கின்றன, இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய சரித்திரங்கள், ஊடகங்கள் தங்கள் பொறுப்பை கொஞ்சமாவது உணர்ந்து நேர்மையாக எழுதவேண்டும் என்பது எனது ஆதங்கம்

said...

வாழ்க்கையில் பல வருடங்களுக்குபின்னர் ஒரு வரலாறு படிக்கும் வாய்ப்பு. நிறையவிபரம் அறியவைத்துள்ளீர்கள், நன்றி.

said...

குழலி இதெல்லாம் சும்மா விளம்பரத்துக்குத்தான். மற்றபடிக்கு கல்வெட்டு படிக்கு போகணும்னு ஆசையெல்லாம் இருக்கு பார்ப்போம்.

said...

அன்புள்ள குழலி நன்றாக எழுதியுள்ளீர்கள்.

நுணுக்கமாக சிந்திக்க வேண்டிய பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளீர்கள்.

மிகவும் நன்றாக உள்ளது.

உங்களைப் போலவே துறை தொழில் நுட்பமாக இருந்தாலும் வரலாற்றுச் செய்திகளில் மிகுந்த ஆர்வம் உண்டு. சாண்டில்யனின் கடல் புறாவிலிருந்து ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் அதனை வெறும் கதையாகவே எடுத்துக் கொண்டேன்.

கல்கியின் சிவகாமியின் சபதம் மற்றும் பொன்னியின் செல்வனைப் படித்த போது தான் அவை வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது என்றுணர்ந்தேன். எப்பொழுது கல்கியின் அலை ஓசையை படித்தேனோ அப்பொழுது தான் எழுதுபவர்கள் எப்படியெல்லாம் தங்களுடைய சமுதாய காழ்ப்புணர்ச்சிகளை கதாப் பாத்திரங்களின் மேல் திணித்து வரலாற்றை மாற்றி புதினங்கள் படைக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டேன். அது வரை பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மீதிருந்த வரலாற்று நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டேன்.

இதோ நீங்களும் நல்ல ஓர் உதாரணத்துடன் வரலாற்றுப் புரட்டை எடுத்துக் காண்பித்துள்ளீர்கள். ஒரு காலத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்களை சுதந்திரப் போராளிகள் என்று இன்றைய கால கட்டத்தில் நாம் கூறுகிறோம். ஒருவேளை இன்று சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களை நாளைய சமுதாயம் சுதந்திரப் போராளிகள் என்று சிறப்பிக்கும்.

இப்படிப்பட்ட அநியாய வரலாற்றுப் புரட்டுக்கள் ஊடகங்கள் தங்களிடைய நிலையை மாற்றிக் கொண்டாலன்றி மாறப் போவதில்லை!

said...

வழக்கத்துக்கு மாறான வித்தியாசமான பதிவு . நடையில் நிறைய மாற்றங்கள் வாழ்த்துக்கள் நட்சத்திரமே!

said...

வரலாறென்பது வெல்பவர்களின் கைகளால் எழுதப்படும் புத்தகம்னு படிச்சிருக்கேன் ..

அத எழுதுனது யாரோ ?!! :-)

-
செந்தில்/Senthil

said...

நல்ல பதிவு குழலி ..

இப்படிக்கு
பெருமையுடன் ..
விசிலடிச்சான் குஞ்சு

said...

குழலி., நட்சத்திரமா?., வாழ்த்துக்கள். கலக்கலான ஆரம்பம்., இந்தப் பதிவும் கலக்கல்தான். வரலாற்றில் 'புரட்டைப்' பற்றி பேசினோமானால் பேசிக்கொண்டே இருக்கலாம் குழலி., இந்திய வரலாற்றையே குமரிக் கரையில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் ஆனால் இமயத்திலிருந்து ஆரம்பித்து புரட்டிருக்கிறார்கள். நம்மையும் இமயம் முதல் குமரி வரைன்னு சொல்லப் பழக்கப் படுத்திட்டாய்ங்க!!. குமரி முதல் இமயம் வரைதான்னுதான் சொல்லனும். இத நான் சொல்லல வரலாற்று மேதை கார்டுவெல் சொல்றாரு. கடந்துபோன நூற்றாண்டுகளை விடுங்க போன நூற்றாண்ட எடுத்துக்கிட்டாலே.,
"அஹிம்சைப் பேரொளியில்
பகத்சிங்குகள் மறைக்கப் பட்டதால்தானோ
சுதந்திர மாளிகையை எலிகள் சுரண்டுகின்றன....?" கவிஞர்கள் கேள்வி கேட்கும் நிலையில்தான் உள்ளது வரலாறு.

கல்கி., காதுல சுத்துன பூவையெல்லாம் வரலாறுன்னு சொல்றவங்களும் இருக்கங்க.( நானே அந்த மாயையில பொன்னியின் செல்வனை ஓடி., ஓடி படிச்சேன்), ஆனா கல்கி மாதிரி வேறு வரலாற்றுக் கதாசிரியர்கள் வெளியே தெரியவில்லை. புரட்டு எங்கும்... எதிலும் எத எழுதுறது?. போங்க. கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு., ஏடுகள் காணக்கிடைத்தால்., உண்மையான ஆவணங்களுடன் பதிவு செய்வோம்., பல சிற்றசர்களின் வீரமும் தீரமும் பதியப்படமல் மண்ணோடு புதைந்து போய்தான் விட்டது., முத்தரையர் என்ற மன்னர்கள் எங்க ஊர் (திருச்சி) பக்கம் புகழுடன் ஆண்டவர்கள். கடந்த அம்மா ஆட்சியில கு.பா. கிருஷ்ணன் மந்திரியான உடனேதான் நிறையப் பேருக்கு இது தெரியுது.

said...

The basic premise of this article is itself wrong. Kopperumsingam lived 800 plus years ago and he is menioned in as much as any of other minor king of his time is remembered. SOmetimes, the minor kings get so much written about them, leave alone out Chola, CHera and Pandyas. In reality, the area ruled by most of the tamil kings were quite small, for most of the time, compared to their counter parts in northern and western india. The best part was that Pallavas, who promoted Sanskrit, got over turned by Pandyas and Chozhas, and they in turn did yeoman service, by promoting tamil scholars. Tamil survived and made tamil kings remembered even today. If Pallavas, whom Kuzhali seem to consider as forefathers of vanniars, had continued, tamil would have become talayalam. Emperors and Kings are remembered and revered based on the impact they had on the society they were ruling, not just because of one solitary victory in a battle.

said...

Kuzhali,
I know the descendants of
the great king Kopperunjinga.If you want to know more please let me know

said...

Kuzhali,
I know the descendants of
the king Kopperunjinga.If you want to know more please let me know.

said...

Chera,Chola and Pandyas are not 100% gentlemen.They sometimes become jealous when a chieftain becomes popular among the poets and the people.

said...

Can anyone tell who is the Chola decendant living now?

said...

What the great Cholas and the imperial Pandyas doing now?

said...

I can point out the persons who belong to the family of Kadavarayan Kopperunjinga.Contact me.

said...

உலகில் நிகழும் மாற்றங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல்... மாற்றானுடன் சண்டை மட்டுமே செய்து கொண்டு , மேலும் சச்சரவை ஏற்படுத்தும் கோவில்களை மட்டுமே கட்டி வந்த காலத்தில் இருந்த தமிழ் மன்னர்கள் மத்தியில் சோழர்கள் கல்லணை கட்டி காவேரிக்கு கிளை நதிகளை வெட்டி வீராணம் ஏரி முதல் பல ஏரிகள், குளங்கள் வெட்டி தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டங்களில் நீர் வளத்தை பெருக்கி இன்றும் இப்பகுதி விவசாயத்தின் ஜீவனாக விளங்குபவர்கள் சோழர்கள் தான் ... இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சோழர்கள் புகழ் நிறைந்திருக்கும் ... ஒன்று இரண்டல்ல காவேரிக்கு 36 கிளைகளை வெட்டி உள்ளனர் ... இந்த ஒரு செயலை இந்திய சரித்திரத்தில் சோழர்களை அன்றி வேறு எங்கும் காண முடியாது ... மற்றபடி வீரம் என்பது எல்லா அரச வம்சத்துக்கும் சிலகாலம் மட்டுமே ... ஒன்று நினைவிருக்கட்டும் தமிழக தனி வரலாற்றை முடித்து அதனை இந்திய வரலாற்றுடன் சேர்த்தவன் மாலிக் கபூர் என்ற ஒரு அலி (திருநங்கை ) ஆக சோழர்கள் மட்டுமே புகழுக்கு உரிய மக்கள் சேவை ஆற்றிய மகத்தான மாமன்னர்கள் .... மற்ற எவரும் அல்ல .மன்னிக்கவும் எவனும் அல்ல

said...

இந்தியாவில் கடந்த 5000 ஆண்டு வரலாற்றில் ஆண்ட அரசுகளில் இதுவரை நான்கு மட்டுமே பேரரசு என்னும் நிலையை பெற்றுள்ளன . முதலில் பேரரசு என்றால் என்ன ? தன் நாட்டை அந்நிய படையெடுப்புகளில் இருந்து காத்து நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்தி பிற நாடுகளின் மீது படையெடுத்து அவற்றை வெற்றி கொண்டு அதனை கொண்டு தன் நாட்டை மேலும் வளப்படுத்துவதே பேரரசு ஆகும் . அந்த வகையில் இந்தியாவில் பேரரசுகள் மௌர்ய பேரரசு , குப்த பேரரசு, முகலாய பேரரசு மற்றும் சோழ பேரரசு...அத்தகைய பெரும் பேரரசுகளை நிறுவியவர்களே பேரரசன் என்று சொல்லபடுவர்... ஆக அவர்கள் சக்ரவர்த்தி அசோகர் , சக்ரவர்த்தி விக்ரமாதித்யர், சக்ரவர்த்தி அக்பர் மற்றும் சக்ரவர்த்தி ராஜராஜ சோழன் ... மேலும் வடஇந்தியர்கள் தென்னாட்டில் மீது போர் தொடுத்தனர் அதில் தென்னாட்டில் இருந்து வட நாட்டின் மீது படையெடுத்து அதில் வெற்றியும் பெற்றவன் ஒரே ஒருவன் தான் அவன் தான் கங்கை கொண்ட மாவீரன் ராஜேந்திர சோழன் . அத்தகைய பேரரசுகளின் வழியில் தென் நாட்டில் ஏறக்குறைய 417 ஆண்டுகள் ஆண்ட ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் சோழசாம்ராஜ்யம். பின்னாளில் சில போர்களில் தோல்வியுற்று சிற்றரசர்களின் குழப்பங்களால் சிதறி ஏறக்குறைய மறைந்துவிட்டது ... அந்த காலத்தில் செத்த பாம்பை அடித்து விட்டு தனக்கென ஒரு அரசை ஆண்டானாம் ... அவனை அவர் என்று அழைக்க வேண்டுமாம் பேரரசன் என்றும் சொல்ல வேண்டுமாம் . sir முதல்ல பேரரசு , பேரரசன் இவற்றின் இலக்கணம் என்னவென்று தெரிந்து கொண்டு உங்க கோப்பெருஞ்சிங்கன், மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு எந்த விதத்திலயாவது கொஞ்சமாவது சமமான்னு யோசிச்சி பாருங்க அய்யா ...கோப்பெருஞ்சிங்கன் போல சிற்றரசர்கள் வரலாற்றின் பக்கங்களில் பலர் உண்டு ..... அப்படிப்பட்ட ஒரு சாதாரண சிற்றரசன் எப்படி ராஜராஜன் ராஜேந்திரன் போன்ற பேரரசர்களோடு வரலாற்றில் எழுதப்பவான் .

said...

நன்(றி)றுகள்.

said...

yeppa...

antha kattu viriyan kitta apram pesiniyaa...pesinaakka selva ragavantta intro kudu...avaru innoru aayirathil oruvan edukka usefullaa irukkum...

said...

//Can anyone tell who is the Chola decendant living now?//

Pichavaram Zamindar(Vanniyar) is a descendant of cholas...only his family gets crowned in chidambaram temple (which is done only to cholas). No other castes like Kallar,Maravar and Agambadiyar got this priveleage...Pichavaram Zamindar is still living to prove that Mukkulathor has nothing to do with cholas....

said...

காடவர் கோன் என்பது பல்லவர் பட்டங்களில் ஓன்று. ஆனால் பள்ளர்வர்களின் முதன்மையான பட்டங்கள் தொண்டைமான், பல்லவராயன் என்பதுதான். சமீப காலத்தில் இவர்கள் ஆண்டு இருக்கிறார்கள். புதுகோட்டை பல்லவராயர்கள், அறந்தாங்கி தொண்டைமான்கள், அதன்பிறகு இந்திய சுதந்திரம் அடையும் வரை ஆண்ட ஒரே தமிழர்கள் புதுக்கோட்டை தொண்டைமான்கள், இவர்கள் அனைவரும் கள்ளர் குலத்தவர் . கடவர் கோன் கொப்பெருசிங்கன் தான் பல்லவன் வாரிசு என்பது தவறு.


தொண்டை நாட்டை (காஞ்சிபுரம், திருப்பதி பகுதி) கி மு காலத்திலேயே கள்ளர்கள் தான் ஆண்டு இருகின்றனர் என்பதற்கு சாட்சி. "கழல் புனை திருந்தடிக் களவர் கோமான், மழபுலம் வணக்கிய மாவண் புல்லி..விழவுடை விழுச்சீர். வேங்கடம்". . (அகம்.61) (மாமூலனார் பாடியது). வேங்கட பகுதியை ஆண்ட கள்ளர்களை தொண்டையர் என்று சங்க இலக்கியங்கள் அழைகின்றன.."வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்-டோங்குவெள்ளருவி வேங்கடத்தும்பர் அகம்.213) (தாயங்கண்ணனார் பாடியது).. இறுதிவரை வாழ்ந்த பல்லவராயர்களும், தொண்டைமான்களும் தங்களை கள்ளர் என்றும், இந்திர குலத்தவர் என்றும் அழைகின்றனர், அக்னி குலம் என்று அழைத்து கொள்ள வில்லை. பல்லவர்களின் பட்டங்கள் ஓன்று விடாமல் கள்ளர் குலத்தில் காணலாம்.மறவர், அகமுடையார், வநீயர் களுக்கும் பல்லவர் பட்டங்கள் உண்டு. சோழர் காலத்து கல்வெட்டு "அகபடி முதலி சோழ கோன் பல்லவராயன் என்று ஒரு அகமுடையாரை விளிக்கிறது. எனவே காடவர் கோன் என்ற ஒன்றை சொல் போதுமானதாக இல்லை.

//Mukkulathor has nothing to do with cholas.// இதைவிட காமெடி என்னவாக இருக்கும்? , பள்ளி என்ற இனம் சோழநாட்டில் பழைய காலத்தில் வாழ்ந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. விஜயாலய சோழன் காலத்திற்கு முன்பே கள்ளர் இனத்தை சேர்ந்த திருமங்கை ஆழ்வார் சோழ படைதலபதியாய் இருந்து பூம்புகாரை சேர்ந்த பகுதியான திருநகர், திருவாலி பகுதிகளை ஆண்டு இருக்கிறார்( 8 ஆம் நூற்றாண்டு ). சோழர் காலத்து போர் பட்டனக்ளில் சோழ பேரரசு வளர்ந்து விட்ட பிறகு உண்டான பட்டங்களே வன்னியரில் காணப்படும். அதற்க்கு முன் பல போர் பட்டங்கள் உண்டு.அவை எல்லாம் கள்ளர் குலத்தில் மட்டுமே காணப்படும். உதாரணம் தக்கோல போர். தக்கொலாக்கியார் என்ற பட்டம் கள்ளர் குடியில் உண்டு. சோழர்களின் எல்லா பட்டங்களும் கள்ளர் இனத்தில் மட்டுமே காணப்படும். பள்ளி குலத்தில் சோழ பேரசு உதித்திருந்தால் ஆரம்ப கால மூலபடைகள் பள்ளிக்லாகவே இருந்திருப்பர். ஆனால் அவர்கள மூலபடையாக இருந்ததிர்கான ஆதாரமோ , பட்டங்களோ இல்லை. சோழ நாட்டில் கூட பிற்காலத்தில் குடியேரியவரே வன்னியர்கள். வன்னியர் என்ற பட்டம் கள்ளர்களே சோழர் காலத்தில் தரித்திருந்தனர் . இவர்கள் இப்போது தஞ்சை பகுதியில் உள்ளனர்.இவர்கள் கள்ளர்கள். பிச்சார்வரம் வன்னியர் முன்னோர்கள் கள்ளர் குல வன்னியரா? பள்ளி குல வன்னியரா? என்று கூட அறுதியிட்டு கூற முடியாது. அவர் சோழ பரம்பரை என்று சொல்வதெல்லாம் அபத்தம், ஏன் என்றால் ராஜராஜ சோழனின் உண்மையான கல்லறையே இதுவரை இனம் காணப்படவில்லை(ஒரு இடம் காட்டபட்டாலும் இதுவரை அறிஞர்களால் ஒத்து கொள்ளப்படவில்லை). அப்படியிருக்க பிச்சாவரம் சமிந்தார் எல்லாம் வாரிசாக இருப்பின் எப்போதோ பிரபலம் ஆகி இருப்பார், ஆனால் வரலாற்று பெருமக்கள் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிக. படையாச்சி, உடையார், வன்னியர் என்ற பட்டங்களை தரித்து அகமுடைய முதலியார்கள் வட தமிழகமெங்கும் வாழ்கின்றனர். எனவே அதிகபடியாக எதையும் நினைத்து கொள்ள வேண்டாம். கள்ளர் வன்னியர்களுக்கு பொதுவாக இருப்பது பல்லவ அரசு. கள்ளர் பார்கவ குலத்தாரோடு நெருங்கிய தொடர்புடையது சோழ பேரரசு. எனவே Mukkulathor has nothing to do with cholas. என்பது எல்லாம் பச்சை தற்குறித்தனம்,

said...

\\காடவர் கோன் என்பது பல்லவர் பட்டங்களில் ஓன்று. ஆனால் பள்ளர்வர்களின் முதன்மையான பட்டங்கள் தொண்டைமான், பல்லவராயன் என்பதுதான். சமீப காலத்தில் இவர்கள் ஆண்டு இருக்கிறார்கள். புதுகோட்டை பல்லவராயர்கள், அறந்தாங்கி தொண்டைமான்கள், அதன்பிறகு இந்திய சுதந்திரம் அடையும் வரை ஆண்ட ஒரே தமிழர்கள் புதுக்கோட்டை தொண்டைமான்கள், இவர்கள் அனைவரும் கள்ளர் குலத்தவர் .\\

பல்லவர்கள் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டப் பின்பு,பல்லவகுடியினர் பல்லவராயர்,சேதிராயர் மற்றும் காடவராயர் என்ற பெயரில் சோழ அரசின்கீழ் படைத்தலைவர்களாகவும்,அதிகாரிகளாகவும் பணியாற்றினர்.அவ்வாறாக வந்த ஒருவர்தான்,சோழமன்னன் குலோத்துங்கச் சோழன் படைத்தளபதியான பல்லவர் குடியிலிருந்து வந்த கருணாகரத்தொண்டைமான். தொண்டைமான் என்பவர் உண்மையில் பல்லவக்குடிகளே. பல்லவர் என்றாலே உண்மையில் தொண்டையர் என்றுதான் அர்த்தம்.இளந்திரையன் 'தொண்டைமான்' என்ற பட்டத்தை தரித்திருந்தான்.கருணாகரத் தொண்டைமானை "வன்னியர்" என்று சொல்கிறது கம்பரின் சிலையெழுபது நூல். கருணாகார தொண்டைமானின் குலம் வன்னியர் குலம் என்றும்.. சம்பு மகரிஷி கோத்திரம் என்றும் இந்த நூல் சொல்கிறது...

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html

இவர்களின் வழிவந்தவரே பிற்காலத்தில் திருச்சியை சுற்றிய பகுதியில் பல்லவராயர்கள் என்ற பெயரில் 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவக்குடிகள்.இவர்களுக்கும் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சிசெய்த பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.ஏனெனில்,அவர்கள் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகள்.
பிற்காலத்தில் பல்லவர்கள் அன்னியர்களால் வீழ்ச்சியுற்ற சமயத்தில்,அவர்கள் வன்னியரில் ஐக்கியமாயினர்.16 ஆம் நூற்றாண்டின் பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்போர் உண்மையான பல்லவர்குடி கிடையாது.அவர்கள் வடுகர் இனத்தைச் சார்ந்தவர்கள்.வடுகர் உண்மையான பல்லவராய மன்னனைக் கொன்று விட்டு தம்மை பல்லவராயர் என அழைத்துக்கொண்டனர். இதற்கிடையில் பிற்காலத்தில் புதுக்கோட்டையை ஆட்சி செய்த வடுகர் 'தொண்டைமான்' பட்டத்தை தாங்கி வந்தனர்.அவர்களின் கீழ் பணிபுரிந்த கள்ளர் குலத்தார் தங்களை தாங்களாகவே 'தொண்டைமான்' என அழைத்துக் கொண்டனர்.இதுதான் கள்ளர் குலத்தாருக்கு தொண்டைமான் பட்டம் வந்தமுறை (இதன் பொருட்டே இவர்கள் தனியாக 'கள்ளர் குல தொண்டைமான்' என்றே தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படுகிறார்கள்). காரணம் உண்மையான 'தொண்டைமான்' 'பல்லவராயர்' பரம்பரையினருக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் பல்லவர்களும் சேரர்களும் அக்னிக் குல க்ஷத்ரியர்கள் என்பதும். அக்னிக்குல க்ஷத்ரியர்கள் வன்னியர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. உண்மையான 'பல்லவராயர்' 'தொண்டைமான்' என்போர் 'பண்டாரத்தார்' என்ற விருதுப் பட்டம் கொண்ட வன்னிய பரம்பரையினரே. வன்னியரான தமிழ் அறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார் (சோழர் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதியவர்)பற்றி அனைவரும் அறிவர்.

சிலைஎழுபதை படியுங்கள் . உணமையான தொண்டைமான் வன்னியர்கள் என்பது விளங்கும்

said...

\\காடவர் கோன் என்பது பல்லவர் பட்டங்களில் ஓன்று. ஆனால் பள்ளர்வர்களின் முதன்மையான பட்டங்கள் தொண்டைமான், பல்லவராயன் என்பதுதான். சமீப காலத்தில் இவர்கள் ஆண்டு இருக்கிறார்கள். புதுகோட்டை பல்லவராயர்கள், அறந்தாங்கி தொண்டைமான்கள், அதன்பிறகு இந்திய சுதந்திரம் அடையும் வரை ஆண்ட ஒரே தமிழர்கள் புதுக்கோட்டை தொண்டைமான்கள், இவர்கள் அனைவரும் கள்ளர் குலத்தவர் .\\

பல்லவர்கள் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டப் பின்பு,பல்லவகுடியினர் பல்லவராயர்,சேதிராயர் மற்றும் காடவராயர் என்ற பெயரில் சோழ அரசின்கீழ் படைத்தலைவர்களாகவும்,அதிகாரிகளாகவும் பணியாற்றினர்.அவ்வாறாக வந்த ஒருவர்தான்,சோழமன்னன் குலோத்துங்கச் சோழன் படைத்தளபதியான பல்லவர் குடியிலிருந்து வந்த கருணாகரத்தொண்டைமான். தொண்டைமான் என்பவர் உண்மையில் பல்லவக்குடிகளே. பல்லவர் என்றாலே உண்மையில் தொண்டையர் என்றுதான் அர்த்தம்.இளந்திரையன் 'தொண்டைமான்' என்ற பட்டத்தை தரித்திருந்தான்.கருணாகரத் தொண்டைமானை "வன்னியர்" என்று சொல்கிறது கம்பரின் சிலையெழுபது நூல். கருணாகார தொண்டைமானின் குலம் வன்னியர் குலம் என்றும்.. சம்பு மகரிஷி கோத்திரம் என்றும் இந்த நூல் சொல்கிறது...

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html

இவர்களின் வழிவந்தவரே பிற்காலத்தில் திருச்சியை சுற்றிய பகுதியில் பல்லவராயர்கள் என்ற பெயரில் 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவக்குடிகள்.இவர்களுக்கும் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சிசெய்த பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.ஏனெனில்,அவர்கள் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகள்.
பிற்காலத்தில் பல்லவர்கள் அன்னியர்களால் வீழ்ச்சியுற்ற சமயத்தில்,அவர்கள் வன்னியரில் ஐக்கியமாயினர்.16 ஆம் நூற்றாண்டின் பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்போர் உண்மையான பல்லவர்குடி கிடையாது.அவர்கள் வடுகர் இனத்தைச் சார்ந்தவர்கள்.வடுகர் உண்மையான பல்லவராய மன்னனைக் கொன்று விட்டு தம்மை பல்லவராயர் என அழைத்துக்கொண்டனர். இதற்கிடையில் பிற்காலத்தில் புதுக்கோட்டையை ஆட்சி செய்த வடுகர் 'தொண்டைமான்' பட்டத்தை தாங்கி வந்தனர்.அவர்களின் கீழ் பணிபுரிந்த கள்ளர் குலத்தார் தங்களை தாங்களாகவே 'தொண்டைமான்' என அழைத்துக் கொண்டனர்.இதுதான் கள்ளர் குலத்தாருக்கு தொண்டைமான் பட்டம் வந்தமுறை (இதன் பொருட்டே இவர்கள் தனியாக 'கள்ளர் குல தொண்டைமான்' என்றே தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படுகிறார்கள்). காரணம் உண்மையான 'தொண்டைமான்' 'பல்லவராயர்' பரம்பரையினருக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் பல்லவர்களும் சேரர்களும் அக்னிக் குல க்ஷத்ரியர்கள் என்பதும். அக்னிக்குல க்ஷத்ரியர்கள் வன்னியர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. உண்மையான 'பல்லவராயர்' 'தொண்டைமான்' என்போர் 'பண்டாரத்தார்' என்ற விருதுப் பட்டம் கொண்ட வன்னிய பரம்பரையினரே. வன்னியரான தமிழ் அறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார் (சோழர் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதியவர்)பற்றி அனைவரும் அறிவர்.

சிலைஎழுபதை படியுங்கள் . உணமையான தொண்டைமான் வன்னியர்கள் என்பது விளங்கும்

said...

// இதைவிட காமெடி என்னவாக இருக்கும்? , பள்ளி என்ற இனம் சோழநாட்டில் பழைய காலத்தில் வாழ்ந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. //

வன்னியக்குல மன்னர்களில் ஒருவரான மகேந்திர பல்லவன் பவுத்தம் தழுவிய சமயம் அவர் உறவினர்களான வன்னியர்களும் பவுத்த மதத்திற்கு மாறினார்கள். ஒரு மதத்தை சேர்ந்தவர் மற்றொரு மதத்தை சேர்ந்தவனை இழிவாக அழைப்பதாய் நினைத்து கொண்டு அழைப்பது போல பவுத்த மதத்துக்கு மாறிய வன்னியரை "பள்ளி" என்று அழைத்தனர் மற்ற மதத்தினர்.
மகேந்திர பல்லவன் பவுத்ததில் இருந்து சைவத்துக்கு மாறிய திருநாவுக்கரசரின் செயலை கண்டித்து அவருக்கு தண்டனை தந்த போது எல்லாம் சிவ பெருமான் திருநாவுக்கரசரை காத்து அருளினார். இதனால் தன் தவறை உணர்ந்த மகேந்திர பல்லவன் மீண்டும் சைவ மதத்துக்கு மாறினார். அப்படியே வன்னியரும் மதம் மாறினார். ஆனால் "பள்ளி" என்று அழைத்து வந்த சொல் மாறவில்லை. பிற்காலத்தில் சூழ்ச்சியின் காரணமாக வன்னியர்கள் வறுமையில் சிக்கிய போது கூலி வேலை செய்தனர். அப்போது அவர்களை பள்ளி என்று அழைத்து "பள்ளி" என்ற சொல்லை இழிவானதாக காட்ட முயன்று தோற்றனர் மாற்று இனத்தவர்.

இப்படித்தான் பள்ளி என்ற சொல் வந்தது .

said...

\\ கள்ளர் என்றும், இந்திர குலத்தவர் என்றும் அழைகின்றனர், \\

இது உண்மை. ஆனால், பல்லவர்களும் , சேர மன்னர்களும் தம்மை அக்னி குல க்ஷத்ரியர் என்றுதான் கூறியுள்ளனர் .
பல்லவர்கள் தங்களை வில்லிகள் என்றுதான் கூறுவார்.
வன்னியருக்குஇன்னொரு பெயர் வில்லிகள் தான் .
அதனால் தான் , சேரன் தன் சின்னத்தை வில்லாக கொண்டான் .
வன்னியர் குல க்ஷத்ரியரை அக்னி குல க்ஷத்ரியர் என்றுதான் கூறுவார்கள் . தமிழகத்தின் சாதி பட்டியலை பார்க்கவும் .

said...

//அப்படியிருக்க பிச்சாவரம் சமிந்தார் எல்லாம் வாரிசாக இருப்பின் எப்போதோ பிரபலம் ஆகி இருப்பார், //

சோழர் காலம் முதல் , சிதம்பரம் கோவிலில் முடி சூடி கொள்ளும் உரிமை சோழர்களுக்கு மட்டுமே உண்டு .
அதைதான் இன்றும் பிச்சாவரம் சோழனார்கள் செய்கிறார்கள் .

உங்களால் முடிந்தால் , கள்ளர்கள் ,மறவர் , அகமுடையார் ஆகியவர்களை அங்கே முடி சூடி காட்ட சொல்லுங்கள் பார்ப்போம்

said...

பல்லவர்களும் , சேர மன்னர்களும் தங்களை பள்ளி இனத்தார் என்று குறிப்பிட்ட கல்வெட்டின் link below .

http://www.youtube.com/watch?v=bG0owVwisew

http://www.youtube.com/watch?v=qUpWn4sP-z4

said...

சோழர்களுக்கும பள்ளி இனத்திற்கும் தொடர்பே கிடையாது.பள்ளி என்பவர்கள்
முல்லை நிலஆயர்கள்.பல்லவ மற்றும் சோழர்களின் படைப்பிரிவில் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டவர்கள்.
பல குழுக்கள் இவர்களுள் உண்டு.அதெல்லாம் இவர்கள் பிறமன்னர்களிடம் வேலை செய்த போது அரசனால் சூட்டப்பட்டவை.சம்புவராயர் தஞ்சை கள்ளர்குலமன்னர் அவரிடம் வேலை செய்த பள்ளிகள் சம்புகுலமெல்லாம் ஆகமுடியாது.பல்லவ,சோழ மன்னர்கள் தஞ்சைகள்ளர் மரபினர்கள்.

said...

குலசேகர பாண்டியன் said...
சோழர்களுக்கும பள்ளி இனத்திற்கும் தொடர்பே கிடையாது.பள்ளி என்பவர்கள்
முல்லை நிலஆயர்கள்.பல்லவ மற்றும் சோழர்களின் படைப்பிரிவில் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டவர்கள். ############################################# ஹஹா ...வாங்க கள்ளர் அவர்களே ................... பொய்யை பேசுவதும் பட்டங்கள் வரலாற்று திருடுவதும் கள்ளர் அன்றி வேறு யார் ............ பல்லவர்கள் காடவர் என்று அழைக்கப்பட்டவர்கள் ......... மகேந்திர வர்மன் காடவர் என்றே அழைக்க பெற்றார் ........

பாடல் :
"வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமணர் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்சர மெடுத்தான்"



என்று பாடுகிறது பெரியபுராணம்.



விளக்கம்:

(காடவன் - பல்லவன் மகேந்திர வர்மன்; கண்ணுதல் - சிவபெருமான்.)

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணப்பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக் கோயில்கட்டினான் என்னும் செய்தி இதில் இடம்பெற்றுள்ளது.

பல்லவர் காலத்துப் பக்தி இயக்கத்தின் விளைவையே
இதில் குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார்.

=======
அடுத்து கி.பி. 670 முதல் 685 வரை ஆண்ட பல்லவர் "பல்லவ மன்னன் ஐயடிகள் காடவர் கோன்" என்று அழைக்க பெற்றார் ..........
==========
இந்த காடவர் அரசர்கள் வழி வந்த கொப்பெருஞ்சின்கனும் தன்னை பள்ளி என்றுதான் சொன்னான் //.... அதாவது காடவர் என்பார்கள் பள்ளி இனத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கு கல்வெட்டு உண்டு ...........

அதன் விவரம் இதோ :

From “South Indian Society in Transition: Ancient to Medieval", by Noboru Karashima, OXFORD 2009

Page 74

In a Shrimushnam inscription (ARE 1916 – 232) Kulottungachola Kadavarayan, a Kadava chief, is stated as a Palli.

Pages 137 & 139


=========================


இதே போல காடவர்கள் தங்களை கள்ளர் என்று சொன்ன கல்வெட்டுகளை காட்டுங்கள் பார்ப்போம் ?
அது உங்களால் முடியாது ...
காரணம் கள்ளர் என்பது போரின் போது ஆடு மாடு திருட பயன் பட்ட வெட்சி போர் வீறர் அவ்ளோதான் ... இவர்கள் என்றும் மன்னராக இயலாது ........ தெலுங்கன் காலத்துலத்தன் இவுங்க பாளையம் ஆளவே பயன்ப்பட்டார்கள்

said...

லசேகர பாண்டியன் said...
சம்புவராயர் தஞ்சை கள்ளர்குலமன்னர் அவரிடம் வேலை செய்த பள்ளிகள் சம்புகுலமெல்லாம் ஆகமுடியாது########################### அண்ணே உங்கள் அறிவை கண்டு நான் மெச்சி விட்டேன் ........... சம்புவராயன் தன்னை பள்ளி என்று சொன்ன கல்வெட்டே உண்டு /.... எவனோ ஏதோ ப்ளாக் ல கிறுக்கி வச்ச உலர்களை படிச்சிட்டு வாந்தி எடுக்க வேண்டாம் .


இதோ கல்வெட்டு ஆதாரம் :

சுந்தர சோழன் காலத்தில் (கி.பி 10 ஆம் நூற்றாண்டு) 'ஓமயிந்தன் முந்நூற்றுவன் பள்ளியான கரணமாணிக்கம்' என்பான் சம்புவராயர் குல முன்னோடி.இவன் பள்ளி குலத்தவன்.இவன் குறுநிலத் தலைவன் ஆவான்.( South Indian Inscriptions - Vol 7, no.500)


====================

இதே போல கல்வெட்டு ஆதாரம் சம்புவராயர் தங்களை கள்ளர் என்று சொன்ன கல்வெட்டு காட்டுங்கள் பார்ப்போம்....

முடியாது காரணம் கள்ளர்களுக்கு பட்டங்கள் வந்ததே எப்போது தெர்யுமா ?

கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் கள்ளர் சமூகத்தவர்கள் மத்தியில் இத்தகைய பட்டங்கள் பயன்படுத்தப்படத் தொடங்கின என விஜய நகர வரலாறு குறித்த தமது நூலில் பர்டன் ஸ்டெயின் (Burton Stein) குறிப்பிட்டுள்ளார்.
- திண்ணை.காம்

போய் கேளும் Burton Stein அவர்களை

said...


குலசேகர பாண்டியன் said... பல்லவ,சோழ மன்னர்கள் தஞ்சைகள்ளர் மரபினர்கள். ############## ஆதாரம் இருக்கிறதா ? வெறும் பட்டங்கள் என்று சொல்ல வேண்டாம் .. பட்டங்கள் வன்னியருக்கும் உண்டு ..........

இன்று வரை சோழர்க்கன்றி சூட்டோம் முடி என்று சொன்ன தில்லை அந்தணர்களால் , இன்றுவரை சோழனார் என்று முடி சூட்ட படுவது வன்னியர்கள் மட்டுமே .... வேறு எவரும் இல்லை ... இந்த மரியாதை கள்ளர் க்கு இல்லை ...

சோழன் கடைசி தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரத்தின் முதல் மரியாதை வன்னியர்களுக்கு தான் ...

கள்ளர் க்கு இல்லை ... சென்று பாருங்கள் ...காட்டகராம் தேவர் என்று பட்டம் கொண்ட வன்னியர்கள் அவர்கள் .....

பல்லவர் க்கு கிடைக்கும் வரதராஜா பெருமாள் கோவில் முதல் மரியாதை, சோழர்க்கன்றி வேறு யாருக்கும் தராத தில்லை முடி சூட்டுதல் என்று அனைத்தும் வன்னியர்க்குதான் தர ப்படுகிறது .... கள்ளர் க்கு அல்ல ............... வரலாறு தெரிந்து வந்து பேசும் ........

said...

குலசேகர பாண்டியன் said... கள்ளர்குலமன்னர் அவரிடம் வேலை செய்த பள்ளிகள் ################# உச்சகட்ட நகைச்சுவை ./.... வன்னியர்கள் கள்ளர் களுக்கு பெண் கொடுப்பார்களா ? மாட்டர்கள் ... இன்னும் வன்னியர் சில இடத்தில் கள்ளர்களை வீட்டுக்குள் கூட அனுமதிக்க மாட்டார்கள் ... ஆனால் வன்னியர்களின் சிவகிரி சம்ச்த்தானம் மறவர் பெண்ணை திருமணம் செய்தார்கள் ... ஒருபோதும் கள்ளர்களை கட்ட மாட்டார்கள் ... முதலில் கள்ளர் மறவர் அகமுடையார் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளும் ........


கள்ளன்:

பெயர் விளக்கம் - வேற்று நாட்டுஆநிரைகளைக் களவிற் கவருமாறு, சோழ வேந்தரால்ஆளப்பட்ட பாலைநிலத்து வெட்சி மறவர் கள்ளர்அல்லது கள்வர் எனப்பட்டனர்.

"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்" (தொல்.புறத்.2)


அதாவது ஆடு மாடு திருடுவது ... களவர் கூட்டம் ....

மறவர்கள் மட்டுமே களபோர் செய்பவர்கள் .. இவர்கள் வன்னியர்கள் போல.....அடுத்து அகமுடையர்கள் அரண்மனை காவல்காரர் ............அவ்ளோதான் ..இவர்கள் சேர்வையாக சேற்று கொள்ள பட்டவர்கள் .......


மூலப்படை, கூலிப்படை; நாட்டுப்படை, காட்டுப்படை; பகைப் படை, துணைப்படை; என இவ்விருபாலாகப் பகுக்கப்படும் .

அறுவகைப் படையுள் நாட்டுப்படை என்பது படையாட்சி கைக்கோளர் செங்குந்தர் படைகளையும்,

காட்டுப்படை என்பது கள்ளர் மறவர் படைகளையும் குறிக்கும்.

படைத்தலைவர் இயல்பாகத் தத்தம் படைமறவர் பாங்காகவே வதிவராதலின், வேந்தரை அடுத்தும் அவர் தலைநகரிலும் என்றுமிருந்த படைத்தலைவர் நாட்டுப்படைத்தலைவரே( படையாட்சி ).

கூலிப்படை போர்ச்சமையத்திற்கு மட்டும் கூலிக்கு அமர்த்திக் கொள்வது. துணைப்படை என்பது தனித்தவிடத்து நட்பரசர் படையையும் போர்க்களத்தில் பகைப்படையல்லாத தன்படைத் தொகுதியையுங் குறிக்கும். வழிமுறைப் பண்பு வரவர வளர்ந்தும் இயற்கையாக அமைந்தும் இருக்குமாதலாலும், வாழ்நாள் முழுவதும் உணவளித்துக் காத்த அரசனுக்கு நன்றியறிவாகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தல் மறவ ரியல்பாதலாலும், 'தொல்படைக் கல்லா லரிது' என்றார்.

"சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளம ரென்னும் - பிறங்கழலுள்
ஆருயி ரென்னும் அவிவேட்டார் ஆங்கஃதால்
வீரியரெய் தற்பால வீடு"

நிலைப்படை என்றும் (படையாட்சி ) களின் நாட்டுப் படையாகவே யிருக்கும். அது மூலப்படையெனவும் படும். மூலம் என்னும் தென்சொல்லின் திரிபே மௌலம் என்னும் வடசொல்லும். மூலப்படையைத் 'தொல்படை' என்று வள்ளுவர் குறிக்கிறார்.
(குறள் 762)
தொல்படையாகிய மூலப்படை பற்றிப் பரிமேலழகர் தெளிவுற விளக்கியுள்ளார். அம்மூலப் படையை அரசன் அவல் பொரி முதலியவற்றைக் கொடுத்துக் காப்பாற்றும் என்பதுகுறிப்பெச்சம்'' என்பது, கோ. வடிவேலு செட்டியாரவர்கள் தெளிவுரை. இப்படையின் சிறப்புப் பற்றி மேலும் தந்துள்ள விளக்கம் வருமாறு: ''மூலப் படை அரசனது முன்னோரைத் தொடங்கிவரும் சேனை. இது மூல பலம் எனப்படும்.

இராமாயணம், இராவணன் இந்திரசித்து மாண்ட பிறகு இராமர் முதலாயினோரை அழித்தொழிக்குமாறு மூலபலச் சேனையை அனுப்பினான் என்று கூறுவதாலும் இஃது அறியப்படும். அம் மூலப்படைக்குச் சிறப்பாவது அரசனிடத்து அவன் முன்னோரைத் தொடங்கிவரும் அன்பும் தான் சிறிதாகிய விடத்தும் பயந்து நீங்காத சௌரியம் (வீரம்) உடைமையுமாம்.

மூலம், பலம் என்ற இரண்டு சொற்களுக்கும் வேர் என்ற பொருளும் உண்டு என்பது இங்கே நினைக்கத் தக்கது.
ஆதிதொட்டு வருதல், மூலம் ஆகி வேராகியிருத்தல், முதலான பண்புகளை உடையது மூலப்படை என்பது புலப்படுகிறது. வேரே அழிந்ததென்றால் பின் வாழ்வு இல்லை என்பது தெளிவு.


ஆதாரம் :
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=197&pno=106
http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=32&pno=762
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=67